நீலகிரியில் காவலர்களுக்கு பதவி உயர்வு
நீலகிரியில் துணை காவல் ஆய்வாளர்ளாக 26 போலீசார் பதவி உயர்வு பெற்ற காவல் துறையினர்.
தமிழகத்தில் துணை காவல் ஆய்வாளர் பணிக்கு தேர்வு எழுதி நேரடியாகவும், காவல்துறையில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த போலீஸாருக்கு பதவி உயர் வழங்கப்பட்டும் துணை காவல் ஆய்வாளராக பணியமர்த்தப்படுகின்றனர்.
இதில் கடந்த 1999-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்து பணியாற்றி தற்போது ஏட்டுகளாக உள்ளவர்களுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி 25 வருடங்கள் நிறைவு பெற்றது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பணியில் சேர்ந்த போலீஸாருக்கு ஜூன் 1-ம் தேதி முதல் துணை காவல் ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.
ஆனால் நீலகிரி மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்ற 26 பேருக்கு இதுவரை பணி ஆணை வழங்கப்படாமல் இருந்தது. எனவே பதவி உயர்வு பெற்றவர்கள் துணை காவல் ஆய்வாளருக்கான சீருடை தைத்து வைத்து எப்போது அதற்கான உத்தரவு வரும் என எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் கோவை மண்டல டி.ஐ.ஜி. சரவண சுந்தர் உடனடியாக உத்தரவு பிறப்பித்து, பணி ஆணையில் கையெழுத்திட்டு நீலகிரி காவல் ஆய்வாளர் அலுவலகத்திற்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். இந்த உத்தரவு நகல் போலீஸாருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பணி ஆணை பெற்ற 26 துணை காவல் ஆய்வாளர்களும் பொறுப்பேற்று கொண்டனர். அவர்களுக்கு ஏ.டி.எஸ்.பி., சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார்.