புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: கலெக்டர்!
கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை வகித்து பேசு கையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் மீது வரப்பெறும் புகார்கள் மீது அலு வலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
By : King 24x7 Angel
Update: 2024-07-08 06:25 GMT
புதுக்கோட்டை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 'குற்றங்கள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், போக்சோ சட் டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், குற்றப்பத்திரிகை தாக்கல், இன்ஸ்பெக்டர்கள் விசாரணையில் உள்ள வழக்குகளின் நிலுவைகள், பெண் குழந்தைகளிடம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்துதல், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விவா திக்கப்பட்டது. கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை வகித்து பேசு கையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் மீது வரப்பெறும் புகார்கள் மீது அலு வலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர் வசந்தகுமார், மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.