ஓமலூர் அருகே விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு

ஓமலூர் அருகே விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-06-25 07:15 GMT

ஓமலூர் அருகே விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி இந்திரா நகரில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கெயில் நிறுவனம் சார்பில் கொச்சின்-மங்களூரு இடையே பூமிக்கு அடியில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

ஓமலூர் அருகே கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஓரமாகவோ அல்லது சரபங்கா நதியோரம் செயல்படுத்தலாம். அதை விடுத்து விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதால் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாய நிலம் பாதிப்பு இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என கூறியுள்ளனர்.

Tags:    

Similar News