கூவம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கூவம் நதிக்கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-05-20 14:25 GMT

கூவம் நதிக்கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.


கூவம் நதிக்கரையோரம், திருவேற்காடு பெருமாள் கோவில் தெருவில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகள், கூவம் நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என, நீர்வள ஆதாரம் மற்றும் பூந்தமல்லி தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இந்த குடியிருப்புகளை அகற்றுவதற்காக, வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு, பகுதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம், வீடுகளை கணக்கெடுத்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் 'நோட்டீஸ்' ஒட்டினர். அங்கிருந்தோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்டோர், கண்களில் கருப்பு துணி கட்டி, அப்பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News