தேனி நகராட்சி ஆணையரை கண்டித்து போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு

தேனி நகராட்சி ஆணையரை கண்டித்து நகர் மன்ற உறுப்பினர்கள போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-02-14 10:46 GMT


தேனி நகராட்சி ஆணையரை கண்டித்து நகர் மன்ற உறுப்பினர்கள போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.


தேனி அல்லிநகரம்-நகராட்சி 33 வார்டு உறுப்பினர்களை கொண்ட நகராட்சியாக இருக்கின்றது இதில் திமுகவை சேர்ந்த ரேணுகா பாலமுருகன் நகராட்சி தலைவராக இருக்கின்றனர் இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி நகர் மன்ற கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது

இதில் 88 தீர்மானங்கள் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது அதில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தீர்மானங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தனர் நகர் மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகளை மீறி ஒரு தலை பட்சமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதனால் திமுக உறுப்பினர் செல்வம் மற்றும் நகராட்சி ஆணையர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

இந்நிலையில் தேனி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்ஷா உறுப்பினர்களை ஒருமையில் பேசுவதாக அவரை கண்டித்து நகர் மன்ற உறுப்பினர்கள் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர் தேனி நகரின் முக்கிய பகுதிகளில் ஆணையரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Tags:    

Similar News