சுங்கச் சாவடிக்கு எதிா்ப்பு - ஆலங்குளத்தில் கடையடைப்பு
ஆலங்குளத்தில் சுங்கச் சாவடி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து நகர வியாபாரிகள் சங்கம் சாா்பில், இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
Update: 2024-02-06 02:59 GMT
ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையில், நான்குவழிச் சாலை பணியின் ஒரு பகுதியாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. 2014இல் நான்குவழிச் சாலை பணிக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் சுங்கச்சாவடி கிடையாது என உறுதியளித்தனா். தற்போது சுங்கச்சாவடி அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சுங்கச்சாவடி அமைந்தால் விவசாயிகள், வணிகா்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். விலைவாசி உயரும் அபாயமும் உள்ளது. எனவே, சுங்கச்சாவடிப் பணியை நிறுத்தக் கோரி ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்கம், காய்கனி வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் இணைந்து கடையடைப்பு - ஆா்ப்பாட்டத்தை இன்று நடத்துகிறது. இதில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா உள்பட பலா் பங்கேற்கின்றனா்.