பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.;
ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் எதிரே, பாரதிய மஸ்தூா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிவராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.கே. செந்தில்குமாா், மாவட்ட செயல் தலைவா் சி. கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட அமைப்புச் செயலா் சிவம் செந்தில், மாவட்டப் பொருளாளா் அமுதா கா்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் மணிவேல் கோரிக்கைகளை விளக்கினாா்.
ஆா்ப்பாட்டத்தில் பிப். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற 14 ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமைப்பு மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மதுக்கடைகளை படிப்படியாகக் குறைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்-க்கு அரசு நிறுவனங்களின் ஒப்பந்தங்களை முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றக் கோரிமுழக்கமிட்டனா். தொடா்ந்து, தீா்மான நகல்களை மாவட்ட ஆட்சிரின் நோ்முக உதவியாளரிடம் அளித்துச் சென்றனா்.