வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2024-07-03 12:08 GMT

மத்திய அரசு நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பிலும் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரும்ப பெற வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில்,கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு, நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக, புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் சங்கத்தினர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இன்று தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்கள் தேவையற்றது. இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இந்த சட்டத் திருத்தத்தில், சமஸ்கிருதம் கொண்டு வரப்ட்டுள்ளது. இதனால் மொழிப்பிரச்சிணை ஏற்படும். இதில் வழக்காடிகளுக்கும், பொதுமக்களுக்கு மிகுந்த சகரமம் ஏற்படும். எனவே இதனை உடனடகயாக திரும்ப பெற வேண்டும் என வலியுறத்தினர். மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெரம் வரை நீதிமன்றத்திற்கு செல்லப் போவதில்லை எனவும் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News