காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நித்திரவிளை காவல் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-03-13 13:09 GMT

நித்திரவிளை காவல் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கொல்லங்கோடு நகராட்சி 11வது வார்டு நம்பாளி ஜங்ஷனில் ஹைமாஸ் லைட் திறப்பு விழாவில் பங்கேற்பதற் காக விஜய்வசந்த் எம்.பி. வந்திருந்தார். அப்போது கல்வெட்டு தொடர்பாக எழுந்த பிரச்னையில் காங்கிரஸ் கட்சியினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் செல்லச்சாமி மீது நித்திர விளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதை கண்டித்து அருமனை, களியல் சிபிஐஎம் வட்டாரக் குழுக்கள் இணைந்து அருமனையில் இருந்து பேரணியாக அருமனை காவல் நிலையத்துக்கு சென்று ஆர்ப்பாட்டம்நடத்தினர். சிபிஐஎம் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி மீது நித் திரவிளை போலீசார் தாக்குதல் நடத்தி, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்க முயற்சிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், நித்திரவிளை காவல் ஆய்வாளரை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News