கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கறுப்பு துணி கட்டி போராட்டம்

Update: 2023-12-12 10:17 GMT

ஆர்ப்பாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே , 5அம்ச, கோரிக்கை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதலமைச்சர் சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த ,தேர்தல் கால வாக்குறுதிகளை ,நிறைவேற்ற வலியுறுத்துவது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து ,பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயதில் பத்து விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி உதவியாளர்கள், கிராம ஊழியர்களுக்கு ,குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு குறைகள், மற்றும் நிலுவை கோரிக்கைகளை தீர்வு செய்ய வேண்டும் , உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன முழக்கமிட்டனர்.
Tags:    

Similar News