விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய பாஜக அரசை கண்டித்து விருதுநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-15 16:24 GMT
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய பாஜக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கிழக்கு மாவட்ட செயலாளர் இனியவன், மத்திய மாவட்ட செயலாளர் சந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் பிரியதர்ஷிணி, சிவகாசி மாநகர் மாவட்ட செயலாளர் செல்வின் ஏசுதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான திமுக, கம்யூனிஸ்ட் , மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய பாஜக அரசு கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து கண்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News

Test