இலவச வீட்டு மனை பட்டா கோரி நூதான போராட்டம்

வண்டியூர் தீர்த்தக்காடில் இலவச வீட்டு மனை பட்டா கோரி ஆட்சியர் அலுவலகத்தில் உணவு சமைத்து பெண்கள் நூதான போராட்டம் நடத்தினர்.

Update: 2024-06-24 15:21 GMT

வண்டியூர் தீர்த்தக்காடில் இலவச வீட்டு மனை பட்டா கோரி ஆட்சியர் அலுவலகத்தில் உணவு சமைத்து பெண்கள் நூதான போராட்டம் நடத்தினர்.


மதுரை தீர்த்தக்காட்டில் 1985 ஆம் ஆண்டு 449 ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை அனுமந்த பட்டா வழங்கப்பட்டது, பின்னர் 14 ஆண்டுகளுக்கு முன் இம்மக்களுக்கு பட்டா வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது, இ-பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 200 க்கும் 5 ஆம் நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள், போராட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயிலில் தங்களது வீடுகளில் வளர்க்கும் ஆடு மற்றும் சமையல் பாத்திரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினார்கள்.

மேலும் சமையல் செய்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர், இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர், போராட்டத்தை அடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News