திம்மராஜபுரத்தில் உள்ளிருப்பு போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரத்தில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
Update: 2024-04-02 01:08 GMT
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பவானி வேல்முருகன் ஒருங்கிணைப்பில் மாபெரும் உள்ளிருப்பு போராட்டம் நேற்று (ஏப்.1) நடைபெற்றது. இதில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன், பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி நெல்லை நிஜாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.