பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்து, பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-05 13:31 GMT

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி சி., எம் பி சி., எஸ் சி., எஸ் டி., மாணவர்களின் கல்லூரி சேர்க்கைகளில் இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்து, ராசிபுரத்தில் பாமக மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே பாமக மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவரணி அமைப்பாளர் பாலு தலைமை வகித்தார். இதில் 25.க்கு மேற்பட்ட பாட்டாளி மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி சி., எம் பி சி., எஸ் சி., எஸ் டி., மாணவர்களின் கல்லூரி சேர்க்கைகளில் இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்தும், தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

BC/MBC வகுப்பினருக்கான நிரம்பாத இடங்களை SC/ST பிரிவினரை கொண்டு நிரப்புவது சரியானது. ஆனால் SC/ST வகுப்பினருக்கான நிரம்பாத இடங்களை காலி இடங்களாக வைக்க வேண்டும் என்பது அநீதி SC/ST வகுப்பினருக்கான நிரம்பாத இடங்களை BC/MBC பிரிவினரை கொண்டு நிரப்ப வேண்டும் சமூகநீதி காக்கப்பட வேண்டும். பழைய நடைமுறையே தொடர வேண்டும் புதிய அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், எனவும் மேலும் உயர்கல்வி அமைச்சர் பொன்முடியே ராஜினாமா செய் என கோசங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்பாட்டத்திற்கு மாநில மாணவரணி செயலாளர் பாலு தலைமை வகித்தார், பாமக செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாணவரணி மாவட்ட செயலாளர் குமார், நகர பொறுப்பாளர்கள் மணி,யுவராஜ், வேம்பு, அருள், ஜெகன், மாரிமுத்து ,ராமு ,நல்லதம்பி, இராசிபுரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சேகர், சக்தி, பத்மகுமார், வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் குணசேகரன், ரத்தினவேல், ராமு, தங்கதுரை, சீனு, சௌந்தர், எம்.ஜி.ஆர், கட்டநாச்சம்பட்டி தியாகு, மாதேஷ், மணி உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News