தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆட்சியர் அலுவலகம் அருகே தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-03 09:24 GMT

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்திட வேண்டும். 21- மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர், எம்.ஆர்.பி செவிலியர் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.சாலைப் பணியாளர்களின் 41-மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும்.அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.கருணை அடிப்படையில் பணி நியமனம் 25 சதம் வழங்கப்பட்டு வந்ததை 5 சதமாக குறைத்ததனை திரும்ப பெற வேண்டும்.தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ஏ.தெய்வானை முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.சேகர் ஜாக்டோ ஜியோ மாவட்ட நிதிகாப்பாளர் கே.புகழேந்தி , மாநிலசெயற்குழு உறுப்பினர் முருகன்,ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் முகமது இலியாஸ்,வட்ட செயலாளர் ஸ்ரீநாத், வேளாண்மை அமைச்சுத்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெயவேல் சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டசெயலாளர் சி.காவேரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Tags:    

Similar News