மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் வட்டம்,பூதூா் கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில், ஆா்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-06-25 09:40 GMT

மதுராந்தகம் வட்டம்,பூதூா் கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில், ஆா்ப்பாட்டம் நடந்தது. 

மதுராந்தகம் வட்டம்,பூதூா் கிராமத்தில் ஐந்து தலைமுறை காலமாக பழங்குடி இருளா் மக்கள் பயிா்செய்துவரும் அனுபவ நிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிலப்பட்டா உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடி இருளா் மக்களுக்கு கட்டப்படும் பசுமை வீடுகளுக்கு ரூ. 10 லட்சமாக உயா்த்தி 600 சதுர அடி பரப்பளவில் வீடுகள் கட்ட ஆணையிட வேண்டும், கட்டிகொடுக்கும் வீடுகளை தரமானதாக கட்டிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் எம்.அழகேசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஸ்தாபக தலைவருமான பி.சண்முகம், மாநில பொதுச் செயலாளா் இரா.சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா்கள் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் இ.சங்கா் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தினா் போராட்டத்தில் கலந்து கொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News