முகநூல் நண்பர்கள் குழு சார்பில் நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கல் !!!
முகநூல் நண்பர்கள் குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் டேவிட் தலைமையில் அங்குள்ள முதியோர்களுக்கு ,நரிக்குறவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-22 09:13 GMT
உணவு வழங்கல்
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினம்தோறும் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவ முதியவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.இந்த முதியவர்களுக்கு உதவும் வகையில் இன்று (ஏப்.22) முகநூல் நண்பர்கள் குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் டேவிட் தலைமையில் அங்குள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.