பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு
பள்ளி மாணாக்கர்களுக்கு தலைக்கவசம் வழங்கி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது
பள்ளி மாணாக்கர்களுக்கு தலைக்கவசம் வழங்கி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்சி பள்ளியின் தாளாளர் பேங்க்சுப்ரமணியன் தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஜெயசித்ரா அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் குளித்தலை கிராமியம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கிராமியம் நாராயணன் மற்றும் இந்திய நுகர்வோர் சம்மேலத்தின் இயக்குனரும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுவின் கூட்டமைப்பின் தலைவரும் ஆன சொக்கலிங்கம் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பள்ளி மாணாக்கர்களுக்கு ஹெல்மெட் வழங்கினர். இதன் மூலம், பெற்றோர்களுக்கு ரோடு சேப்டி மற்றும் ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தனர்.
மேலும், தான்தோன்றிமலை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் கலந்து கொண்டு சாலை விதிகள் குறித்து விளக்கவுரை ஆற்றினார். இறுதியாக பள்ளி நிர்வாக அலுவலர் வித்யா நன்றி கூறினார்.