வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல்

கடலூர் மாவட்டம்,அரசடி குப்பம் பகுதியில் வீடு எரிந்த குடும்பத்திற்கு பாமக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.;

Update: 2024-06-03 05:40 GMT
வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல்

வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல்

  • whatsapp icon

நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, அரசடிக்குப்பம் கிராமத்தில் வசிக்கும் இளங்கோவன் கோவிந்தராஜ் வீடு மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்துக்கு உள்ளாகி முற்றிலும் எரிந்து அவர்களது உடமைகள் முற்றிலும் தீக்கிரையானது.

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் முதல் கட்ட உதவியாக அவர்களுக்கு உடனடி தேவையான நிதி உள்ளிட்ட நிவாரண உதவியை செய்தார்.

மற்றும் அரசு தரப்பிலிருந்து செய்ய வேண்டிய உரிய நிவாரண உதவியை உடனடியாக செய்ய வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளை கைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார்.

Tags:    

Similar News