காங்கேயத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களில் நேற்று சென்னிமலை சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களில் நேற்று சென்னிமலை சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நேற்று மாலை நடைபெற்ற இவ்விழாவிற்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட 4ஆம் மண்டல தலைவர் இல. பத்மநாபன் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசியதாவது: தமிழ்தாடு முதலமைச்சர் மு.க. ஸடாலின் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் மகளிருக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள், எளிய குடும்பங்களுக்கான நலத்திட்ட உதவிகள், பள்ளி குழந்தைகளுக்கானகாலை உணவு திட்டம, புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவி குழு கடன், வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம், நகை கடன் தள்ளுபடி, மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்து வசதி போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் காங்கயம் பகுதி பொதுமக்களின் நலனுக்காகவும்,
வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் சுமார் பயனாளிகளுக்கு தொழிலாளர் நலவாரிய அட்டைகளையும், பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளையும் வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இந்நிகழ்வில் காங்கயம் வட்டாச்சியர் மயில்சாமி, காங்கயம் நகர செயலாளர் வசந்தம் நா. சேமலையப்பன்,
தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.கே. கார்த்திகேயன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே. சிவானந்தன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.