ஜமாபந்தி நிறைவு நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஜமாபந்தி நிறைவு நாளில் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

Update: 2024-06-27 11:13 GMT

ஜமாபந்தி நிறைவு நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி ராணிப்பேட்டை கோட்டாட்சியர் மனோன்மணி தலைமையில் நடைபெற்றது. ஜமாபந்தி நிறைவு நாளில் பொதுமக்களிடமிருந்து 431 மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றில் 61 மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு தையல் எந்திரம், சலவைப் பெட்டி, நெல் விதைப்பான் கருவி, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. ஏரிக்கரை பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய் ஆயப்படுத்துதல், கிராம பகுதியில் உள்ள குளங்களை தூர்வாருதல், குளக்கரை பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல் போன்ற மனுக்களை ஆய்வு செய்து அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது கோட்டாட்சியர் மனோன்மணி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் ஸ்ரீதேவி, வருவாய் ஆய்வாளயர்தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர்கள் சானு, கணேஷ், சதீஷ், ராஜகோபால், கிருஷ்ணமூர்த்தி, மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News