நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல் !
காரைக்குடியில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-11 11:16 GMT
நலத்திட்ட உதவி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் 50 வது பிறந்ததினத்தையொட்டி சுமார் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் வழங்கினார்.
அப்போது புஸ்ஸிஆனந்த் பேசுகையில், தலைவர் விஜய் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். புதிதாக கட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், வந்தாலும் முதலில் சுவரொட்டிகள் ஒட்டிய தொண்டர்களை தலைவர் விட்டு கொடுக்க மாட்டார்.
அதனால் தொண்டர்களை யாரும் இலக்காரமாக பார்க்க கூடாது. நமது கட்சி மக்கள் சேவை செய்யும் கட்சியாக மாறியுள்ளது. வருகிற 2026-ம் ஆண்டு எந்த தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை தலைவர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.