மூத்த ரயில் பயணிகள் படியேறாமல் பேட்டரி காரில் செல்ல ஏற்பாடு

மயிலாடுதுறை ரயல்நிலையத்தில் வயதானப் பயணிகள் நடைமேடைகளுக்கு சென்று வர ஓஎன்ஜிசி நிர்வாகம் பேட்டரி கார் வழங்கியது.

Update: 2024-03-14 11:36 GMT

பேட்டரி கார் வழங்கல்

மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் முதியவர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒஎன்ஜிசி நிர்வாகம் சார்பில் பேட்டரி கார் வழங்கும் நிகழ்ச்சி நடந்து. ஒஎன்ஜிசி காவிரி அசட் உற்பத்திப்பிரிவு தலைவர் மாறன் தலைமை வகித்தார்.

அதிகாரிகள் கணேசன், குணசேகரன், சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் செல்வராஜ் பயணிகளுக்கான பேட்டரி காரை லயன்ஸ் கிளப் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். இதில் வணிகர் முன்னாள் தலைவர் செல்வம், லயன்ஸ் தலைவர் சுகுமாறன், பொருளாளர் மகாவீர்ஜெயின், ரயில் பயிர்கள் சங்க பொறுப்பாளர்கள் மகாலிங்கம், சுதாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒஎன்ஜிசி காவிரிஅசட் சார்பில் தமிழகத்தில் 6 மாவட்டத்தில் பணிகள் நடந்து வருகிறது சமூகபொறுப்புணர்வு திட்ட நிதியில் பொதுமக்களுக்கு பல நலதிட்டங்கள் செய்து வருகிறோம். அதன்ஒரு பகுதியாக மயிலாடுதுறை, கும்பகோணம் ரயில்வே ஜங்ஷனில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தலா 8 லட்சம் மதிப்பீட்டில் 2 பேட்டரி கார்களை வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் சேவை அமைப்பான லயன்ஸ் கிளப் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளது அவர்கள் டிரைவர் மூலம் இயக்கி பராமரித்துகொள்வதற்கு ஓஎன்ஜிசி ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.13 கோடி மதிப்பீட்டில் கல்வி, சுகாதாரம், குடிநீர், உழவர் நலன், ஆஸ்பத்திரிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் பணிகளுக்கு நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என ஓஎன்ஜிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது

Tags:    

Similar News