மாணவ,மாணவிகளுக்கு 318 மிதிவண்டிகள் வழங்கல்
உதகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.;
Update: 2024-01-04 03:16 GMT
மிதிவண்டி வழங்கல்
தமிழக அரசால் மாணவ, மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்குச் செல்லவும், வெகு தூரம் உள்ள பள்ளிகளுக்கு எளிதில் சென்று வரவும் பயன்பெறும் வகையில் இலவச மிதிவண்டிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு 1.97 கோடி மதிப்பில் ஒதுக்கபட்ட 4087 மிதிவண்டிகள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ரூ.15.36 லட்ச செலவில் 318 மிதிவண்டிகள் சுற்றுலா துறை அமைச்சர் கா. ராமசந்திரன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.