கோவில்பட்டி : விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 526 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நகராட்சி சேர்மன் கருணாநிதி வழங்கினார்.;
Update: 2024-01-13 02:32 GMT
பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி கலந்து கொண்டு 526 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் நகராட்சி கவுன்சிலர் சுரேஷ்.ஆசிரியர்கள் சுப்பிரமணியன் காளிராஜ், கிரேனா, திமுக நிர்வாகிகள் மணி, தாமோதர கண்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.