தஞ்சை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
தஞ்சாவூர் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாநகராட்சி கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தஞ்சாவூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மன்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் பி.வி.செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகி 13 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,079 மாணவர்களுக்கு ரூ.52 லட்சத்து 87 ஆயிரத்து 100 மதிப்பிலான மிதிவண்டிகளும், 1,432 மாணவிகளுக்கு ரூ.68 லட்சத்து 16 ஆயிரத்து 320 மதிப்பிலான மிதிவண்டிகளும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 21 லட்சத்து 3 ஆயிரத்து 420 மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் முத்துசெல்வன், தஞ்சாவூர் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் மேத்தா, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் வீ.சுதாராணி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மெ.கோவிந்தராஜ், பள்ளித் தாளாளர் இரா.பன்னீர் செல்வம், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் திரு.என்.ஏ.அருண பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.