பழங்குடி பெண்களுக்கு நடமாடும் சிற்றுண்டி வாகனம் வழங்கல்

வேளாங்கண்ணியில் வானவில் அறக்கட்டளையின் சார்பில் பழங்குடி நல வாரியம் வழங்கும் நடமாடும் சிற்றுண்டி வாகனத்தை பழங்குடி பெண்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

Update: 2024-03-14 04:24 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வானவில் அறக்கட்டளையின் சார்பாக பழங்குடி நல வாரியம் வழங்கும் இன்கோ சார்பின் நடமாடும் சிற்றுண்டி வாகனம் சுமார் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் இலவசமாக பழங்குடி பெண்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.  டீ, காபி மற்றும் டிபன். வடை, பிரட் ஆம்லெட் மற்றும் குளிரபானங்கள், ஐஸ்கிரீம் போன்ற அனைத்து விதமான பொருட்களும் நடமாடும் வாகனத்தின் மூலம் விற்கப்படும்.

வேளாங்கண்ணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வண்டி மூலம் பழங்குடி பெண்கள் தொழில் செய்வதற்கு வழங்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்முறையாக நடைமுறைப்படுத்த உள்ளது. இந்நிகழ்ச்சியில் கீழையூர் ஒன்றிய திமுக செயலாளரும், வட்டார ஆத்மாக்குழு தலைவரும், பேரூராட்சித் துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் தாட்கோ மேலாளர்(நாகப்பட்டினம்) சக்திவேல், ஆதி திராவிட நலத்துறை மேலாளர் ரேணுகாதேவி. வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா. மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News