மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன சக்கர நாற்காலி வழங்கல்
கள்ளக்குறிச்சி நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு பாட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.;
Update: 2024-01-08 12:49 GMT
கள்ளக்குறிச்சி நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு பாட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
இன்று (08.01.2024) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,05,000 மதிப்பீட்டில் பாட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.