10 அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கல் !
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 10 அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கல் தனியார் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 10 அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கல் தனியார் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது கும்பகோணம் பகுதியில் உள்ள 10 அரசு பள்ளிகளுக்கு தன்னார்வ அமைப்பு சார்பில் ரூ.5.46 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் டிவிகள் நேற்று வழங்கப்பட்டது.
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், நரசிங்கம்பேட்டை, மங்கம்மாள்புரம், கல்யாணபுரம், சேங்காலிபுரம், வடுககுடி, பழியஞ்சநல்லூர், திருமலைராஜபுரம், மஞ்சமல்லி, நாச்சியார்கோயில் உள்ளிட்ட 10 அரசு பள்ளிகளுக்கு, ஸ்மார்ட் டிவியை, போர்டெஸ் மற்றும் பம்பில் தன்னார்வ அறக்கட்டளையும் இணைந்து வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கித் தலைவர் என்.காமகோடி, போர்டெஸ் அறக்கட்டளை தலைவர் எஸ்.ராமதுரை, பம்பில் டிரஸ்ட் நிறுவனர் பிரேம்குமார் கோகுல்தாசன், கல்வியாளர் தங்கபாபு மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஸ்மார்ட் டிவியில் ‘கல்வி-40' என்ற கற்றல் மேம்பாட்டுச் செயலி ஏற்கெனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 3 -ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்விக்கு இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். .