நடைப்பாதை வியாபாரிகளுக்கு நிழல்குடைகள் வழங்கல் !!
அரியலூர் மாவட்டம், செந்துறையிலுள்ள நடைப்பாதை வியாபாரிகளுக்கு, உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் இனிப்பு அறக்கட்டளை சார்பில் இலவசமாக நிழல்குடைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.;
By : King 24x7 Angel
Update: 2024-05-23 09:10 GMT
நிழல்குடை
அரியலூர் மாவட்டம், செந்துறையிலுள்ள நடைப்பாதை வியாபாரிகளுக்கு, உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் இனிப்பு அறக்கட்டளை சார்பில் இலவசமாக நிழல்குடைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமை வகித்து, வியாபாரிகளுக்கு நிழல்குடைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இனிப்பு அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் இளங்கோவன் பொருளாளர் நல்லாசிரியர் செüந்தர்ராஜன், தலைமை துறை இயக்குநர் முனைவர் சின்னதுரை, குறள் ஆர்வலர்கள் ஆர். விசுவநாதன், தேன்துளி, திருமூர்த்தி, புகழேந்தி, சுப்பிரமணியன், அகிலன், ஆகியோர் கலந்துகொண்டனர்.