அங்கன்வாடி மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் அங்கன்வாடி மையத்தில் நலத்திட்ட உதவிகள் திமுக சார்பில் வழங்கப்பட்டது.

Update: 2024-03-06 07:45 GMT
கீழப்பாவூரில் அங்கன்வாடி மையத்தில் நலத்திட்ட உதவிகள் திமுக சார்பில் வழங்கினர்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் அங்கன்வாடி மையத்தில் தமிழக முதல்வரின் மு,க,ஸ்டாலின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்டம் கேஸ் அடுப்பு மற்றும் எல்இடி டிவி, வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உட்பட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News