அறந்தாங்கியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பாரத பறவைகள் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2024-06-28 16:09 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் பாரத பறவைகள் அறக்கட்டளை சார்பில்நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது‌ ஆண்டுதோறும் ஏழை எளிய குடும்ப உறுப்பினர்களை கண்டறிந்து தேவையான உதவிகளை இந்த குழுவினர் செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில் 16- ம் ஆண்டாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை கண்டறிந்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குலமங்கலம் மரமடக்கி பரவாக்கோட்டை எரிச்சி உள்ளிட்ட பகுதிகளைசேர்ந்த 66 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் மிதிவண்டி நலிவடைந்தவர்களுக்கு பசுமாடு மற்றும் வெள்ளாடு வழங்குதல் சலவைப்பட்டி சிறு தொழில் உபகரணங்கள் அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி வேலைக்கு தேவையான பொருட்கள் வழங்குதல் நலிவடைந்த குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட 5லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பாரத பறவைகள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மறமடக்கி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜமனோகரி ரவி ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி மதியழகன் பாரத பறவை அறக்கட்டளை தலைவர் முரளி செயலாளர் புஸ்பராஜ் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News