திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
Update: 2023-12-05 03:26 GMT
நலத்திட்ட உதவிகள்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் . இதனை தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நான்கு நபர்களுக்கு தலா ரூபாய் 6,000 மதிப்புள்ள இலவச சலவை பெட்டி இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் பொழுது மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திட்ட இயக்குனர் வடிவேல் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.