ஓமலூரில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஓமலூரில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டது;

Update: 2024-05-26 16:09 GMT
ஓமலூரில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

  • whatsapp icon

சேலம் மாவட்டம், ஓமலூர் சந்தை திடலில் உள்ள சமுதாய கூடத்தில் தனியார் கருப்புசாமி சேரிட்டி பவுண்டேஷன் மற்றும் கருப்புசாமி மக்கள் நல சேவை மைய அறக்கட்டளைகள் சார்பாக ஓமலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் படித்த 24 அரசு பள்ளியில் படித்து முதலிடம் இரண்டாவது இடத்தை பிடித்த 47மாணவர்களுக்கும்,

தந்தையை இழந்த 9 மாணவர்களுக்கும் சுமார் 1.5லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஓமலூர் காவல் ஆய்வாளர் லோகநாதன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி அரசு பள்ளிகளில் படித்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செல்லதுரை, தினேஷ்கார்த்திக், மாரப்பன், அகஸ்டின்,அருளப்பன், அகிலாண்டம்,ராமகவுண்டர் மற்றும் வசந்தி உள்ளிட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News