சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு;

Update: 2024-07-15 07:03 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

  • whatsapp icon
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்றனர். சங்கராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த செல்லதுரை பதவி உயர்வு பெற்று அரியலுார் மாவட்ட உதவி திட்ட அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் திருக்கோவிலுாரில் பணிபுரிந்த மோகன் குமார் சங்கராபுரம் ஒன்றிய வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார். சங்கராபுரம் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த இந்திராணி பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பி.டி.ஓ.,வாக பணியாற்றிய செல்வபோதகர் சங்கராபுரத்தில் பொறுப்பேற்றார். புதிதாக பொறுப்பேற்ற பி.டி.ஓ.,க்களுக்கு ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News