காவல்துறையால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
தர்மபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகள் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படவுள்ளதாக மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 14(4) படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 4 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 62 இருசக்கர வாகனங்கள் மொத்தம்- 66 வாகனங்கள், தமிழ்நாடு அரசு G.O. Ms. No.39 Prohibition and Excise (VIII) Department, Dated. 22.10.2019. | படி, 20.02.2023 -ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன. நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் முன் வைப்பு தொகையாக ரூபாய் 10,000/ ம், 20.02.2023 ம் தேதி காலை 08.00 மணிக்குள் ஏலம் நடைபெறவுள்ள இடத்தில் செலுத்த வேண்டும்.
முன் வைப்புத்தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஏலம் விடப்படவுள்ள வாகனங்களைத் தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் 20.02.2024 -ம் தேதி காலை 08.00 மணிக்கு நேரில் பார்வையிடலாம். இருசக்கர வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும், நான்கு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு 18 விழுக்காடு (GST) யும், இருசக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு 12 விழுக்காடு (GST) யும் சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, தருமபுரி அவர்களின் அலுவலகத்தினை நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். தொடர்புகொள்ள வேண்டிய முகவரி தொலைபேசி எண்கள் 04342-230759, 262581, இவ்வாறு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.