உணவு பொருட்கள் கலப்படம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு !
தர்மபுரி பேருந்து நிலையம் அருகே உணவு பாதுகாப்பு துறை சார்பாக குழுவினர் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் ஆய்வு மேற்கொண்டனர்.
By : King 24x7 Angel
Update: 2024-06-14 09:35 GMT
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா அறிவுறுத்தலின் பேரிலும் சேலம் உணவு பகுப்பாய்வு கூட தலைமை பகுப்பாய்வாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தர்மபுரி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில் உதவி உணவு பகுப்பாய்வாளர் கார்த்திக் கொண்ட குழுவினர் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் ஆய்வுக்கு தர்மபுரி பஸ் நிலையம் மற்றும் கலெக்டர் ஆபீஸ் மற்றும் நகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள உணவுப் பொருட்களை சேகரித்து உடனடியாக ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை மக்களுக்கு தெரிவித்தனர் மேலும் டீ தூள்,மஞ்ச தூள், தேன் மற்றும் நெய் போன்ற செய்யப்படுவதை ஆய்வு மூலம் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர் மேலும் பால் மற்றும் பால் பொருட்கள் கலப்படம் செய்வது தகுந்த விளக்கம் கொடுத்தான் மக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.