ரேஷன் கடை அமைத்து தர கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

திருவட்டார் அருகே ரேஷன் கடை அமைத்து தர கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடந்தது.;

Update: 2024-06-12 15:25 GMT

திருவட்டார் அருகே ரேஷன் கடை அமைத்து தர கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் அருவிகரை ஊராட்சிக்கு உட்பட்ட மாத்தூர் தொட்டி பாலம் அமைந்திருக்கும் 9 வார்டில் 225 ரேஷன் அட்டை பயனாளிகள் உள்ளனர் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதால் மாத்தூர் தொட்டிபாலம் நுழைவு வாயில் பகுதியில் 20ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் பயனற்று கிடக்கும் சுய உதவி குழு கட்டிடத்தில் ரேஷன் கடை கொண்டு வர மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி கூட்டம் நடந்த போது 9வது வார்டு உறுப்பினர் மேல்சி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

Advertisement

அவருக்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அலுவலக நேரத்தில் ஊராட்சி அலுவலகத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது அந்த நேரத்தில் பொது மக்கள் ஊராட்சி தலைவி சலேட் கிளிட்டஸ் மேரியை பொது மக்கள் சிறைபிடித்தனர் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News