சுடுகாட்டை சேதப்படுத்தி சமாதிகள் இடித்ததால் பொதுமக்கள் புகார் !
அஞ்சுகிராமத்தில் சுடுகாட்டை சேதப்படுத்தி சமாதிகள் இடித்ததால் கிராம மக்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-16 07:32 GMT
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபுரம் தோப்பூர் பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரில் இறந்தவர்களை தகனம் செய்ய சுடுகாடு மற்றும் இடுகாடு புத்தனார் ஆற்றின் கரையில் உள்ள அரசு நிலத்தில் உள்ளது. இந்த இடத்தை கடந்த ஐந்து தலைமுறைக்கு மேலாக அந்த ஊர் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் ஜே சி பி இயந்திரம் மூலம் சுடுகாடு மற்றும் அங்கிருந்த சமாதிகளை இடித்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் தற்போது இந்த பகுதி மக்கள் இறந்தவர்களை தகனம் செய்ய சுடுகாடு மற்றும் இடுகாடு வசதிகள் இல்லாமல் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே உரிய நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நேற்று இரவு நேரத்தில் தோப்பூர் ஊர் தலைவர் சுபாஷ், துணைத் தலைவர் சுயம்புலிங்கம், மருங்கூர் பேரூராட்சி கவுன்சிலர் நாராயண பெருமாள் உட்பட பொதுமக்கள் பெண்கள் உட்பட திரண்டு வந்து அஞ்சு கிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.