திமுக நிர்வாகி மீது பொதுமக்கள் எஸ்.பியிடம் புகார் மனு
குன்னம் அருகே இரு சமூக மக்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தும் விதமாக பேசிவரும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் எஸ்பியிடம் மனு அளித்தனர்.
Update: 2024-05-07 08:17 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெருமத்தூர் நல்லூர் என்கிற பள்ளக்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவியை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.அதில் திமுக நிர்வாகி ஒருவர் இரண்டு சமூக மக்களிடையே பகை உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் அந்த நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.