கோயில் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடை இடமாற்று பொதுமக்கள் கோரிக்கை
சீர்காழி அருகே பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் டாஸ்மார்க் கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
By : King 24x7 Angel
Update: 2024-01-22 12:15 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கன்னியாகுடி, திருப்பங்கூர் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் இடையூராக உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை இடமாற்றம் செய்யகோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் அளித்த அந்த மனுவில் சீர்காழி அருகே உள்ள கன்னியகுடி மற்றும் திருப்பங்கூர் இடையே மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. டாஸ்மாக் கடையில் மது அருந்தும் உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்கள் சாலையில் உட்கார்ந்து கொண்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் தகாத வார்த்தைகளை பேசுவது, குடித்து முடித்துவிட்டு பாட்டில் மற்றும் கையில் உள்ள பேப்பர்களை அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மீது எறிவது போன்ற பிரச்சனைகளில் ஈடுபடுகின்றனர். மேலும் மது போதையில் சுயநினைவு இன்றி ஆடையின்றி அப்பகுதியில் உள்ள கோவிலில் உறங்குவதாகவும், டாஸ்மார்க் மதுபான கடையானது புகழ்பெற்ற சிவன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பல்வேறு கோவில்கள் உள்ளபகுதியின் அருகாமையிலேயே டாஸ்மாக் மதுபானகடை விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் டாஸ்மார்க் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.