தென்காசியில் கனரக வாகனங்களை தடை செய்ய பொதுமக்கள் கோரிக்கை

தென்காசியில் கனரக வாகனங்களை தடை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2024-02-27 16:20 GMT
தென்காசியில் கனரக வாகனங்களை தடை செய்ய பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் இம்மாவட்டத்தில் எதிர்காலத்தில் கனிம வளங்கள் இல்லாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கும் சூழ்நிலை உருவாகி யுள்ளது.

கனரக வாகனங்கள் சாலைகளில் செல்வதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகள் விரைவில் பழுதாகி விடுகின்றன. மேலும் கனிமவளங்களை எற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் இதர வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுவதோடு, கனரக வாகனங்களால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.

இதனால் சாலைகளில் பொதுமக்கள் பயணிக்;கும் போது மிகுந்த அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. இன்று காலையில் புளியரை செக்போஸ்ட் அருகில் கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனம் பைக்கில் மோதி பைக்கில் சென்றவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக் கிறார்.

கனரக வாகனங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News