மீமிசலில் நவீன மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

மீமிசலில் அனைத்து வசதிகளுடன் நவீன மருத்துவ மனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-19 09:48 GMT

மருத்துவமனை

ஆவுடையார்கோவில்: புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்துக்குடா முதல் கட்டுமாவடி வரை 42 கிலோமீட்டர் தூரம் வரை கிழக்கு கடற்கரை சாலை உன்ளது. இந்த சாலை வழியாக நாகப்பட்டினத்தில் இருந்து கன்னியாகுமரி வரை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதில் மீமிசல் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்தில் சிக்கியவர்களுக்கு அருகில் உள்ள மணமேல்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேரம் விரய மாவதுடன், காயமடைந்தவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதை தவிர்க்க மீமி சலில் அனைத்து வசதிகளுடன் நவீன மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News