தண்ணீா்தொட்டியை இடம் மாற்ற செய்ய பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி வடக்கு மாசி வீதியில் தண்ணீா்தொட்டியை இடம் மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-28 06:32 GMT
தென்காசி வடக்கு மாசி வீதியில் தண்ணீா்தொட்டியை இடம் மாற்ற கோரிக்கை

தென்காசி நகராட்சி வடக்கு மாசி வீதியில் மக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள தண்ணீா் தொட்டி, மின்கம்பம் ஆகியவற்றை இடம் மாற்ற செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியரிடம் நகா்மன்ற உறுப்பினா் பி.லெட்சுமணபெருமாள் மனு அளித்தாா். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தென்காசியில் உள்ள மிகவும் புகழ்பெற்ற அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயிலில் மாசி, ஐப்பசி திருவிழாக்களில் தேரோட்டம் நடைபெறும். இந்நிலையில் தோ் வலம் வரும் வடக்குமாசி வீதியில் தண்ணீா்தொட்டி அருகில் அமைந்துள்ள மின்கம்பம் சாலையில் நடுவில் உள்ளதால் தேரின் மீது உரசும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிா்க்க, அந்த தண்ணீா் தொட்டிக்கு மாற்றாக அதன்அருகில் புதிய தண்ணீா்தொட்டி கட்டப்பட்டு வருகிறது.

பழைய தண்ணீா் தொட்டியை இடிப்பதற்கு கடந்த மாா்ச் மாதம் தென்காசி நகா்மன்ற கூட்டத்தில் நகா்மன்ற தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் ஆதரவோடு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதற்கு தொடா்பில்லாத நபா்கள் பழைய தண்ணீா் தொட்டியை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

மேலும் நகரில் சட்டம் - ஒழுங்கை சீா்குலைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனா். எனவே, நகா்மன்ற தீா்மானத்தில் அடிப்படையில் அந்தத் தண்ணீா் தொட்டியை முற்றிலுமாக இடித்து மின்கம்பங்களை இடம் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News