சாலையோர குப்பைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் சாலையோர குப்பைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.;
Update: 2024-04-09 15:57 GMT
சாலையோர குப்பைகள்
மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பேட்டை ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெரு செல்லும் சாலை ஓரம், பைபாஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில், ஊராட்சி சார்பாக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலை ஓரம் கடை வைத்துள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் தொட்டியில் குப்பையை கொட்டுவதில்லை. புறவழிச்சாலை ஓரம், கோழி இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். சில சமயங்களில், மர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர். இதனால், அப்பகுதியைகடக்கும் வாகன ஓட்டிகள், பேருந்துக்காக காத்தி ருக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறல், சுவாசப்பிரச்னைகளால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லும் கனரக வாகனங்கள், வைக்கோல் கட்டு ஏற்றிச் செல்லும்வாகனங்கள், எரியும்குப்பையிலிருந்து பறக்கும் தீப்பொறியால் விபத்தை சந்திக்கும் ஆபத்துஉள்ளது. எனவே, குப்பையை முறையாக அகற்ற, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.