தார் சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

தேன்பாக்கம் செல்லும் தார் சாலை குண்டும் ,குழியுமாக இருப்பதால் போக்குவரத்துக்கு பயனற்ற சாலையாக மாறி உள்ளது.

Update: 2024-06-16 08:31 GMT
தார் சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சட்டமன்ற தொகுதி சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேன்பாக்கம் ஊராட்சி உள்ளது.இந்த ஊராட்சி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.தேன்பாக்கம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திலிருந்து பள்ளி கல்லூரி பல்வேறு பணிகளுக்காக தினசரி அச்சரப்பாக்கம் செல்வதற்காக பொதுமக்கள் இருசக்கர வாகனம் பயன்படுத்துகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை இருந்து தேன்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.இந்த சாலை தார் பெயர்ந்து வெறும் சிறு கற்களாக காலியாகி காட்சியளிக்கிறது.தினசரி இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது அடிக்கடி டயர் பஞ்சர் ஆகிறது.இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு பயனற்ற சாலையாக உள்ளது.ஆகவே,இந்த சாலையினை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News