குழாய் உடைப்பால் வீணாகுது காவேரி நீர் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

குழாய் உடைப்பால் வீணாகுது காவேரி நீர் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-21 06:00 GMT

குழாய் உடைப்பு

புதுகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இதற்காக திருச்சி ஜீயபுரம் மற்றும் முத் தரசநல்லூர் பகுதியில் காவிரி ஆற்றில் பிரமாண்ட ஆழ்துளை கிணறு அமைக் கப்பட்டு நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் பம்ப்பிங் செய்யப்பட்டு குழாய் கள் மூலம் விராலிமலை, மலைக்குடிபட்டி, இலுப்பூர், அன்னவாசல் வழியாக புதுக்கோட்டை நகருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் பொதுமக்கள் பாதிக் கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் விராலிமலை இனாம் குளத்தூர் சாலையில் கல்லறைக்கு எதிரே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. ஒரு வாரமாக இந்த உடைப்பு சரி செய்யப்படாததால் வெளி யேறும் தண்ணீர் அருகில் உள்ள விலியம்பூர் குளத்துக்கு சென்று குட்டை போல தேங்கி கிடக்கிறது. இதேபோல் பெருவாயில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி குட்பை போல் தேங்கியுள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News