வெறிநாய்கள் சுற்றுவதால் பொதுமக்கள் அச்சம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வடுகம் பகுதியில் குழந்தைகளை கடித்த வெறிநாய் சுற்றுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஆதிதிராவிடர் காலனி 3வது வார்டு பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 1 வருடமாக வசித்து வரும் தெரு நாய் ஒன்று சமீபத்தில் குட்டி ஈன்றுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக போதிய உணவு இல்லாமல், ஆடு, மாடு, மற்றும் கோழிகளை கடித்து வந்தது.
இந்த நிலையில், வீட்டிற்கு வெளியே இருந்த மணிகண்டன் மகன் யாகவீர், 5 இவரின் தம்பி மகன் தேஜஸ்வசந்த் 7, சிவக்குமார் மகள் பிரியதர்ஷினி, 11 ஆகிய மூன்று பேரையும் அடுத்தடுத்து முகத்தில் கடித்தது. 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் அங்கிருந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி அளித்து தற்போது முகத்தில் படுகாயம் அடைந்த தேஜேஸ்வரன் என்ற சிறுவனுக்கு தையல் போடும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
பின்னர் வீடு திரும்பினர். இது குறித்து பிரியதர்ஷினியின் தாய் கவிதா பேட்டியில் கூறுகையில், இந்த நாய் கடந்த ஒரு வருடமாக இங்கு சுற்றி திரிகிறது. ஆடு, மாடு, கோழிகளை கடித்து வந்த இந்த நாய் தற்போது எனது மகள் உள்ளிட்ட மூன்று சிறுமிகளை கடித்துள்ளது. வடுகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அங்கிருந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த தெருவில் 10 தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. பஞ்சாயத்து தலைவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளோம். நாய்களை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.