பொதுமக்கள் குறை தீர் கூட்டம் - கடலூரில் 960 மனுக்கள்
Update: 2023-12-12 07:46 GMT
குறைதீர் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் மனு அளிக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் மொத்தம் 960 மனுக்கள் பொதுமக்கள் அளித்தனர். மனுக்கள் மீது ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.