மல்லசமுத்திரத்தில் அதிமுக மாணவரணி சார்பில் பொதுக்கூட்டம்
மல்லசமுத்திரத்தில் அதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி சிறப்புரையாற்றினார்.;
By : King 24x7 Website
Update: 2024-01-26 01:55 GMT
மல்லசமுத்திரத்தில் அதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி சிறப்புரையாற்றினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாமக்கல் மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மல்லசமுத்திரம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளரும் காளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான பொன்னுசாமி தலைமை வகித்தார்.கபிலர்மலை ஒன்றிய கழகச் செயலாளரும் பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேகர் மாநில பொதுக்குழு உறுப்பினர்திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி மல்லசமுத்திரம் பேரூர் கழகச் செயலாளர் சுந்தர்ராஜன், மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜன், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட அதிமுக கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக கழக மகளிர் அணி இணை செயலாளர் முன்னாள் அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது டாக்டர் பட்டம் பெறுவதற்காக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரை சித்தரவதை செய்த கருணாநிதி கும்பலுக்கு மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கொண்டாட எந்த தகுதியும் இல்லை.கடந்த சட்டமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து வெற்றி பெற்ற ஸ்டாலின் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை ஏற்கனவே அதிமுக செயல்படுத்தி வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டனர் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் பொய்யான வாக்குறுதிகளையும் தாங்கள் ஏற்கனவே வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகவும் கொடுத்து பொது மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் வாக்காளர்கள் யாரும் இவர்களுடைய பேச்சை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கழக வழக்கறிஞர் பிரிவுஇணைச் செயலாளர் பாபு முருகவேல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா மாவட்ட அவை தலைவர் கந்தசாமி மாவட்ட துணை செயலாளர் முருகேசன் வழக்கறிஞர் பிரிவு பரணிதரன்மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்லப்பன்ஆகியோர் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் மாணவரணி இளைஞர் அணி மகளிர் அணி பொறுப்பாளர்கள் சார்பு மன்ற நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடிவில் ராசிபுரம் நகர மாணவரணி செயலாளர்ஜெகன் நன்றி கூறினார்